ஐ.நா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா

ஐ.நா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா அமைதியாகவும் முறையாகவும் தீர்க்கப்பட வேண்டும் என கூறி உள்ளது.
ஐ.நா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா
Published on

நியூயார்க்

ஐ.நா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா, ஐ.நா. சாசனம், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி இந்த விவகாரம் அமைதியாகவும் முறையாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி ஐ.நா பொதுசபையில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

"காஷ்மீர் பிரச்சினை கடந்த காலத்திலிருந்து இருந்து வரும் சர்ச்சை. ஐ.நா. சாசனம் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி அமைதியாகவும், முறையாகவும் தீர்க்கப்பட வேண்டும்.

ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் சர்ச்சை திறம்பட கையாளப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையிலான உறவில் ஸ்திரத்தன்மை மீட்கப்படும் என சீனா நம்புகிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com