

பிஜீங்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) கொடுத்துள்ளது. இதற்கு பிரதிபலனாக எதையும் பாகிஸ்தான் நமக்கு தரவில்லை. மாறாக, நமது தலைவர்களை (ஜனாதிபதிகள்) முட்டாள்களாக கருதி பொய்களை கூறி வந்து இருக்கிறது. ஏமாற்றியும் உள்ளது.
நாம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறோம். அதே நேரம் பாகிஸ்தான் அந்த பயங்கரவாதிகளுக்கு தனது நாட்டில் புகலிடம் அளித்து பாதுகாத்து வருகிறது. இனிமேலும் இதுபோல் நடப்பதை நம்மால் அனுமதிக்க முடியாது. என்று கூறி இருந்தார்.