கொரோனா வைரஸ் உகான் டைரி எழுதிய எழுத்தாளருக்கு அச்சுறுத்தல்

கொரோனா வைரஸ் பாதிப்பின் போது உகான் டைரி எழுதிய எழுத்தாளர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் உகான் டைரி எழுதிய எழுத்தாளருக்கு அச்சுறுத்தல்
Published on

பெய்ஜிங்

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள உகான் கடல் உணவு சந்தையில் இருந்து தான் கொரோனா தோன்றியதாக கூறப்படுகிறது. கொரோனாவா பாதிக்கப்பட்ட முதல் நகரம் உகான் ஆகும். அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

3 மாதங்கள் ஊரடங்கிற்கு பிறகு உகான் நகரம் தற்போது தான் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது.

உகான் நகரை சேர்ந்த புகழ்பெற்ற சீன எழுத்தாளர் பாங் பெகன் தனது சொந்த ஊரில் வெளிவந்த கொரோனா வைரஸ் சோகம் குறித்து உகான் டைரி என ஆன்லைனில் எழுதி உள்ளார். அவரது எழுத்து பல லட்சம் வாசகர்களை ஈர்த்தது. தற்போது அது பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது,

2010 ஆம் ஆண்டில் சீனாவின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய பரிசு வழங்கப்பட்ட 64 வயதான இவர், சீனா தொற்றுநோயைக் கையாளுவதைக் குறிசொல்லும் நாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உகானில் டிசம்பர் மாதம் தொடங்கியது. ஜனவரி மாதம் ஊரடங்கு போடபட்டது. 1.10 கோடி மக்கள் தொகை உள்ள உகான் மக்களின் ஊரடங்கு வாழ்க்கையை அவர் ஆவணப்படுத்தினார்.

நாடு முழுவதும் இந்த நோய் பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிரமாகத் செயலாற்றிய போது தனிமைபடுத்தபட்ட மக்களின் அச்சங்கள், கோபம் மற்றும் நம்பிக்கை பற்றி அவர் எழுதினார்.குடியிருப்பாளர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதையும் விவரித்தார்.

மேலும் நோயாளிகள் படும்வேதனை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு குறித்தும் எழுதினார்.இது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவருக்கு உயிருக்கு வேறு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com