டயானா ஆவன படத்தில் மகன்கள் வருத்தம்

டயானா ஆவண படத்தில் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி மனம் திறந்து பேசியுள்ளனர்.
டயானா ஆவன படத்தில் மகன்கள் வருத்தம்
Published on

இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997 ஆகஸ்ட் 31ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகிவுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று டயானா, எமது தாய்: ஹெர்வ் லைப் அண்ட் லெகஸி (Diana, Our Mother: Her Life and Legacy) என்ற பெயரில் டயானா குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதில் டயானா குறித்து அவர் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி மனம் திறந்து பேசியுள்ளனர்.

டயானாவின் கேளிக்கை நிறைந்த வளர்ப்பு குறித்து இருவரும் பேசியுள்ளனர்.

டயானா அவர்களை குறும்பு பிள்ளைகளாக இருக்க ஊக்கப்படுத்தியதாகவும், இனிப்புகளை திருடி வந்து கொடுத்ததாகவும் பழைய நினைவுகளை அசைப்போடுகின்றனர் இளவரசர்கள்.

இந்த நிகழ்ச்சியில், டயானாவுடன் இளவரசர்களின் எடுத்து கொண்ட இதுவரை வெளிவராத புகைப்படங்கள் இடம்பெறுவது சிறப்பு அம்சமாகும்.

இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இருவரும் டயானாவின் தனிப்பட்ட புகைப்படங்களை பார்த்தபடியே தாயுடனான தங்களது அழகிய நினைவுகள் குறித்து உரையாடினர்.

தாய் டயானாவுடனான கடைசி உரையாடல் தனது மூளையில் பெரும் பாரமாக இருப்பதாக ஹாரி கூறுகிறார்.

ஹாரியும், நானும் அம்மாவிற்கு பிரியாவிடை சொல்லும் அவசரத்தில் இருந்தோம். என்ன நடக்கப்போகிறது என்பது இப்போது எனக்கு தெரிந்திருந்தால் நான் அந்த சம்பவத்தை பற்றியும், பிறவற்றையும் அவ்வளவு எளிதாக எடுத்து கொண்டிருக்க மாட்டேன்,'' என்றார் வில்லியம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com