வடகொரியா அதிபர் கிம் உடனான சந்திப்பை டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்!

வடகொரியா அதிபர் கிம் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்து உள்ளார். #DonaldTrump #KimJongUn
வடகொரியா அதிபர் கிம் உடனான சந்திப்பை டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்!
Published on

வாஷிங்டன்,

வடகொரியா அதிபர் கிம்மிற்கு டொனால்டு டிரம்ப் முடிவு தொடர்பான கடிதத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிடப்பட்டது. வடகொரியா தனது அணு ஆயுதச் சோதனை இடங்களை வெடித்து தகர்த்து வந்தது.

அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதனையடுத்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது. உச்சத்தில் டொனால்டு டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என வடகொரியா எச்சரிக்கையை விடுத்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது என்று வெளிப்படையாகவே டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். மீண்டும் வார்த்தப்போர் உச்சம் அடைந்தது.

இப்போது வடகொரியா அதிபர் கிம் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்து உள்ளார்.

வடகொரியாவின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் பெரிய அளவு பகைமையும், ஆவேசமும் நிறைந்ததாக இருந்தது. இதனால் நீண்ட நாளைய திட்டமான நம்முடைய சந்திப்பை இப்போது நடத்துவது சரியாகாது என்று கருதுகிறேன், இதற்காக நான் வருந்துகிறேன் என்று டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார். மேலும், இது இழந்த வாய்ப்புதான் ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் கிம்ஐ தான் சந்திப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

வடகொரியா அணு ஆயுத திறன்களை பற்றி பேசியது, ஆனால் எங்களுடையது சக்தி வாய்ந்தது, மிகப்பெரியது, அதனை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தாதிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன் எனவும் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com