டுவிட்டர் மூலமான தொடர்பு சமீபத்தில் மிகவும் குறைந்துவிட்டது - எலான் மஸ்க்கின் கேள்விக்கு பயனர்களின் சூடான பதில்!

டுவிட்டர் கணக்குகளுடனான தொடர்பும், சமீபத்திய வாரங்களில் மிகவும் குறைவாக உள்ளது” என்று கூறினார்.
டுவிட்டர் மூலமான தொடர்பு சமீபத்தில் மிகவும் குறைந்துவிட்டது - எலான் மஸ்க்கின் கேள்விக்கு பயனர்களின் சூடான பதில்!
Published on

வாஷிங்டன்,

பிரபல சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்க உலகின் முன்னணி பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்தார்.

இந்நிலையில், 44 பில்லியன் டாலர் தொகைக்கு டுவிட்டரை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் இருந்து மஸ்க் பின்வாங்கினார். அவர் இத்தகைய முடிவு செய்த பிறகு, டுவிட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது.

இப்போது டுவிட்டருக்கு எதிரான நீதிமன்றப் போருக்கு மத்தியில், எலான் மஸ்க், தனது டுவிட்டர் கணக்குடன் உரையாடுபவர்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் மிகவும் குறைந்து விட்டதாக அவர் டுவிட்டர் பயனர்களிடம் வினவினார். 

"கிட்டத்தட்ட அனைத்து டுவிட்டர் கணக்குகளுடனான தொடர்பும், சமீபத்திய வாரங்களில் மிகவும் குறைவாக உள்ளது" என்று டுவிட்டரில் கூறினார்.

அதற்கு பலர், நீங்கள் டுவிட்டரை வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு பின் அதனை மறுத்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளனர்.

ஏனென்றால், நீங்கள் அதை வாங்குவதாகச் சொன்னீர்கள், பின்னர் நீங்கள் எந்த காரணத்திற்காகவும் வெளியேறினீர்கள் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லேவெர்ன் பதில் அளித்தார்.

எலான், நாங்கள் உங்களைப் புறக்கணிக்கிறோம். தவிர, டுவிட்டர் தொடர்புகளின் அளவுகளில் உங்கள் வாழ்க்கையை அளவிடும் அளவுக்கு நீங்கள் வீணாகிவிட்டீரா? என்று ஒருவர் பதில் கூறினார்.

முன்னதாக ஜூலை மாதம் டுவிட்டருக்கு மஸ்க் அனுப்பிய கடிதத்தில், 44 பில்லியன் டாலர் டுவிட்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மஸ்க் அறிவித்தார்.

போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் பற்றி அவர் கோரிய தரவுகளை டுவிட்டர் வழங்காததற்காக, அந்நிறுவனத்தை கையகப்படுத்துவதை மஸ்க் ரத்து செய்வதாக மஸ்க் அறிவித்தார்.டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இது போன்ற பல மீறல்கள் நடந்ததன் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்த மஸ்க் முடிவு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com