உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் பின் தங்கினார்

முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முந்தியுள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் பின் தங்கினார்
Published on

கலிபோர்னியா,

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த திங்கள் கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார்.

டெஸ்லா பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால், இரண்டாவது இடத்தில் 164 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் பின்தங்கி உள்ளார். முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முந்தியுள்ளார். 73 வயதான பெர்னார்ட் அர்னால்ட், எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவராக இயங்கி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com