"என்னை வெளியே கொண்டு வாருங்கள்" வழக்கறிஞரிடம் மன்றாடிய இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு தனது வழக்கறிஞரிடம் மன்றாடி வருகிறார்.
"என்னை வெளியே கொண்டு வாருங்கள்" வழக்கறிஞரிடம் மன்றாடிய இம்ரான் கான்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கான் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவரை, இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் ஹைதர் பன்ஜோதா, திங்கள்கிழமை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதித்தது.

தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு தனது வழக்கறிஞரிடம் இம்ரான் கான் மன்றாடி வருகிறார். அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் தனது வழக்கறிஞரிடம் தன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவது குறித்து பேசி உள்ளார்.

சந்திப்புக்குப் பிறகு வழக்கறிஞர் ஹைதர் கூறியதாவது:-

சிறைக்குள் முன்னாள் பிரதமருக்கு சி கிளாஸ் வசதி செய்து தரப்படுகிறது. இதனால் அவர் மிகவும் வருத்தப்படுகிறார். திறந்த கழிப்பறையுடன் முன்னாள் பிரதமர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் நிறைந்து உள்ளன.  தொலைக்காட்சி, செய்தித்தாள் எதுவும் கிடைக்காத இருட்டு அறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நான் ஒரு பயங்கரவாதி போல யாரும் என்னை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என இம்ரான்கான் கூறியதாக கூறி உள்ளார்.

என்னை இங்கிருந்து வெளியேற்றுங்கள் என்று இம்ரான் கான் தனது வழக்கறிஞரிடம் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும் நான் சிறையில் இருக்க விரும்பவில்லை. எனக்கு உடல் நிலை சரியில்லை.  சிறை அறையில் சிரமப்படுகிறேன் என கூறியதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com