ரஷிய எண்ணெய் ஆலையில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு

ரஷிய எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ரஷிய எண்ணெய் ஆலையில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு
Published on

மாஸ்கோ,

ரஷிய நாட்டில் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரில் அங்கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென தீப்பற்றியது. இந்தத் தீ மின்னல் வேகத்தில் 2,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பரவியது.

உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்தத் தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com