

டாக்கா,
வங்காளதேச தலைநகர் டாக்காவின் ஹசராத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் ஏர் இந்தியா அலுவலகமும் சவூதி ஏர்லைன்ஸ் அலுவலகமும் அமைந்துள்ளது.
இந்த நிலையில்,ஏர் இந்தியா அலுவலகத்தில் மதியம் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும், மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 10 வாகனங்களில் வந்த தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிடத்தில் புகை மூட்டம் ஏற்பட்டதால், விமான நிலைய பணியாளர்களும், பயணிகளும் கட்டிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து விமான புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பயணிகள் யாரும் வர அனுமதிக்கப்படவில்லை