ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பிரான்ஸ் முன்னாள் அதிபர்

நிகோலஸ் சர்கோஸி 2007ம் ஆண்டு முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக செயல்பட்டார்
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பிரான்ஸ் முன்னாள் அதிபர்
Published on

பாரிஸ்,

2007ம் ஆண்டு முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக செயல்பட்டவர் நிகோலஸ் சர்கோஸி (வயது 70). இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லிபியா முன்னாள் அதிபர் கடாபியிடம் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 3 மாதங்களுக்குமுன் தீர்ப்பு வெளியானது. அதில், நிகோலஸ் சார்கோஸி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நிகோலஸ் சர்கோஸி கடந்த மாதம் 21ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து , ஜாமீன் வழங்கக்கோரி நிகோலஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நிகோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 3 வாரங்கள் லா சாண்டி சிறையில் இருந்த நிகோலஸ் நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான உடன் அவர் வீடு திரும்பினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com