அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜூன் முதல் நிறுத்தம்: பயனாளர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜூன் முதல் நிறுத்தம்: பயனாளர்கள் அதிர்ச்சி
Published on

கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தை பெறவும் முடிகிறது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்காணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் இந்த செயலி இல்லாத செல்போன்களே இல்லை என்னும் அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது. டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே பயன்பாடு உள்ளது.

அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானவர்கள் கூகுள் பே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பை கூகுள் பே வெளியிட்டுள்ளது. அதாவது, ஜூன் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் இந்த வசதி நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com