27,000 கி.மீ வேகத்தில் சூரியன்-சந்திரனை கடந்து செல்லும் விண்வெளி நிலையத்தை படம் எடுத்த புகைப்பட கலைஞர்

27,000 கி.மீ வேகத்தில் சூரியன் மற்றும் சந்திரனை கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தை புகைப்பட கலைஞர் ஒருவர் படம் எடுத்து உள்ளார்.
27,000 கி.மீ வேகத்தில் சூரியன்-சந்திரனை கடந்து செல்லும் விண்வெளி நிலையத்தை படம் எடுத்த புகைப்பட கலைஞர்
Published on

வாஷிங்டன்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் மனிதகுலம் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். காற்றில் பறப்பது முதல் விண்வெளியில் நுழைவது என விண்வெளி ஆய்வுமையம் சுழன்று கொண்டு இருக்கிறது. இப்போது கூட அதில் 6 பேர் விஞ்ஞானிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நிச்சயமாக மனிதகுலத்தின் ஒரு கண்கவர் படைப்பாகும், இது பூமியின் மீது (பூமியின் கீழ் சுற்றுப்பாதையில்) ஒரு மணி நேரத்திற்கு 17,000 மைல் வேகத்தில் சுற்றிவருகிறது, இது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியை சுற்றி வருகிறது. மனிதர்கள் இங்கு சென்று ஆய்வு செய்யத்தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு தெளிவான வானத்தில்,சில நேரங்களில் ஐ.எஸ்.எஸ் நமது சூரியனை கடந்து செல்கிறது. அப்போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்து உள்ளார்.

அதுபோல் சர்வதேச விண்வெளி நிலையம் இரவு பின்னணியில் அழகான சந்திரனை கடந்து செல்லும் போதும் புகைப்படம் எடுத்து உள்ளார்.

அவர் தனது படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் @cosmic_background இல் பகிர்ந்து உள்ளார். இந்த அரிய படத்தை அவர் எவ்வாறு கைப்பற்ற முடிந்தது என்பதை விளக்கி உள்ளார். ஒரு நொடிக்கும் குறைவாக, சூரியன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இணைந்தது. இந்த புகைப்படம் திட்டமிடல், நேரம் மற்றும் உபகரணங்களின் விளைவாகும். நான் இரண்டு தொலைநோக்கிகளை கேமராக்களுடன் பயன்படுத்தினேன் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com