

வாஷிங்டன்,
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள ஒரு கம்பெனியுடன் இணைந்து 5 பேர் சர்வதேச கொள்முதல் நிறுவனத்தை தொடங்கினர். அதன் மூலம் அவர்கள் அமெரிக்காவின் நவீன பொருட்களை வாங்கி பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்துக்காக சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்தனர். இதுதொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த முகமது கம்ரன் வாலி (வயது 41), கனடாவை சேர்ந்த முகமது அசன் வாலி (48), முகம்மது ஷேக் (82), ஹாங்காங் அஷ்ரப்கான், லண்டன் அகமது வஹீத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த இவர்கள் 5 பேரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் மீதான கைது வாரண்டு நிலுவையில் உள்ளது. அவர்கள் மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.