சட்டவிரோத பண பரிமாற்றம்: லண்டனில் 10 இந்தியர்கள் கைது

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக, லண்டனில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம்: லண்டனில் 10 இந்தியர்கள் கைது
Published on

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 5 இந்தியர்களும், 5 வெளிநாடு வாழ் இந்தியர்களும் போதைப்பொருட்கள் கடத்தல், அமைப்பு ரீதியிலான குடியேற்ற குற்றம் ஆகியவற்றின் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையொட்டி இங்கிலாந்தின் தேசிய குற்ற முகமை (என்.சி.ஏ.) விசாரணை நடத்தியது.அதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சரண்சிங், வல்ஜீத் சிங், ஜஸ்பீர் சிங் டால், சுந்தர் வெங்கடாச்சலம், ஜஸ்பீர் சிங் மல்கோத்ரா, மன்மோகன் சிங் கபூர், பிங்கி கபூர் உள்ளிட்டோர் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

10 பேரும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com