

லண்டன்,
உலகில் தினம் தினம் புதிய புதிய சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருடன் நட்பை தொடங்கவும், அந்த நட்பை புதுப்பிக்கவும் இன்றைய காலகட்டத்தில் பல சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் குவிந்து உள்ளன.
அதையும் தாண்டி சிலர் நேரில் நட்பு கொள்ள முயற்சி செய்கின்றனர். அதன்படி, லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் கி.மீ பயணித்து, ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார்.
அங்கு நேரில் சென்றபோதுதான் தெரிந்தது, அந்த ஆண் நபர் தன்னைவிட அதிக நேரம் செல்போனில் செலவிடுவதால் அவர் தனக்கேற்றவர் இல்லை என எண்ணி, டேட்டிங் சென்ற பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துவிட்டு லண்டனுக்கே திரும்பி சென்று விட்டார். சமூக வலைதளங்களில் இதுபற்றி பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.