"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்" - முதலமைச்சர் பெருமிதம்

மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்" - முதலமைச்சர் பெருமிதம்
Published on

லண்டன்

தமிழகத்திற்கு தொழில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். கிங்ஸ் காலேஜ் என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கும் ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி வளாகத்தை நேற்று சுற்றிப்பார்த்தார். கிங்ஸ் மருத்துவமனை கிளை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கு தமிழக அரசு முழுஆதரவு நல்கும் என்றும் தனது உரையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

மேலும், இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், அந்நாட்டு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கெண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், தமிழகத்தில் விரிவான அளவில் இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதையும் அவர் எடுத்துரைத்தார். 1 கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆயிரத்து 27 நேய்களுக்கு சிகிச்சை பெறமுடியும் என்றும் அப்பேது குறிப்பிட்டார். ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தெழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்தபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதலமைச்சர், நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் செய்ய வருமாறு அழைப்பு விடுத்து உரையாற்றினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உடனிருந்தனர்.

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழ்நாட்டில் நிறுவிட தமிழக அரசுடன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை இடையே தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com