இந்தோனேசியா: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் பலியாயினர். #Indonesia
இந்தோனேசியா: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலி
Published on

பாண்டூங்,

இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில், சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஜாவா தீவில் சுகாபூமி மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்கு செல்வதற்காக, தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏராளமான கூர்மையான வழைவுகளை கொண்ட பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 மீட்டர் (98 அடி) ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பேர் பலியானதுடன், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர், பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவில் மோசமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com