

46-வது ஜி-7 உச்சிமாநாடு
பொருளாதார வளாச்சியில் முன்னணி வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் 46-வது உச்சிமாநாடு இங்கிலாந்தில் வருகிற 11 முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதற்கு முன்னதாக, அதன் உறுப்பு நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு தலைநகா லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதில் ஜி-7 நாடுகளின் நிதி மந்திரிகள் கலந்து கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் நியாயமான முறையில் வரி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் சர்வதேச வரி விதிப்பு சீதிருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.இதன் முடிவில் சர்வதேச வரி விதிப்பு சீதிருத்தம் தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபம் ஈட்டும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும் நிறுவனங்கள் எந்த நாட்டில் செயல்பட்டு லாபம் ஈட்டுகிறதோ, அந்த லாபத்துக்கான வரியை அந்த நாட்டில்தான் செலுத்த வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார வளம் மிக்க 7 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டுள்ள சூழலில், உலகின் மற்ற நாடுகளும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கான வரி விதிப்பை மாற்றியமைக்க வேண்டும் என ஜி-7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த சூழலில், பன்னாட்டு நிறுவனங்கள் மீதான இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால் உலக நாடுகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்று எதிபாக்கப்படுகிறது. அதேசமயம் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால் அமேசான் கூகுள் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து ஜி-7 நிதி மந்திரிகள் மாநாட்டை நடத்திய இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், இந்த ஒப்பந்தம் 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒரு சிறந்த வரி முறையை உருவாக்கும.
தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ற வகையிலான வரி சீதிருத்தங்களை மேற்கொள்ள அந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என கூறினார். அதே சமயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச வரி விதிப்பு 15 சதவீதம் என்பது மிகவும் குறைவு என்றும், இது தற்போதுள்ள நிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.