

கராச்சி,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வடக்கே நசீமாபாத் பகுதியில் அப்துல்லா கல்லூரி அருகே பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இதில் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த சிலிண்டர் வெடிப்பில் 4 ஆண்கள் பலியானார்கள். 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த எண்ணிக்கையை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இது விபத்து போல் காணப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளனர். எனினும், வெடிப்புக்கான உண்மையான காரணம் பற்றி கண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.