லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு

லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்ப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு
Published on

பெய்ரூட்,

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தூதரக செய்தித்தொடர்பாளர் ஜேக் நெல்சன் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com