

கிரெடெயில்,
பிரான்சு தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் மசூதி பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் மீது வாகனத்தை தாறுமாறாக ஓட்டி மோதிய நபரை காவல்துறையினர் பிடித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இது இருக்க கூடும் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
மேலும் இது பற்றி கூறிய அந்நாட்டு பாதுகாப்பு படையினர், வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்ற நபர், சம்பவ இடத்தை விட்டு உடனடியாக தப்பிச்சென்றார். சிறிது நேரத்தில் தனது வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலுக்கும், தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து குழப்பமான கருத்துக்களை கைது செய்யப்பட்ட நபர் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்மேனிய நாட்டைச்சேர்ந்த அவரிடம், மனநல பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் விசாராணைக்குழு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.