துபாயில் சுமார் ரூ.1,350 கோடிக்கு பிரமாண்ட சொகுசு பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி

அம்பானி துபாயில் ரூ.1352 கோடிக்கு சொகுசு பங்களாவை வாங்கி இருக்கிறார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

துபாய்,

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் தற்போது மும்பையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தெற்கு மும்பையில் அமைந்துள்ள அண்டலியா என்ற சொகுசு பங்களாவில் முகேஷ் அம்பானி வசித்து வரும் பங்களா உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.

இந்த நிலையில் அம்பானி தற்போது துபாயின் பாம் ஜூமேரா தீவில் ரூ.1352 கோடிக்கு பங்களாவை வாங்கி இருக்கிறார். இந்த சொகுசு பங்களாவை குவைத்தை சேர்ந்த அல்ஷாயா குழுமத்தின் தலைவராக உள்ள முகமது அல்ஷாயாவிடம் இருந்து முகேஷ் அம்பானி கடந்த வாரம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்மைக் காலமாகவே, வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவதில் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டில் கூட, பிரிட்டனில் உள்ள 'ஸ்டோக் பார்க்' எனும் 'கன்ட்ரி கிளப்'பை 590 கோடி ரூபாய்க்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com