இளம் வயதில் ஓபாமா தனது காதலிக்கு உருகி உருகி வர்ணித்து எழுதிய காதல் கடிதம்

இளம் வயதில் ஓபாமா தனது காதலி அலெக்ஸ்சாண்ட்ராவுக்கு உருகி உருகி வர்ணித்து காதல் கடிதம் எழுதி உள்ளார்.
இளம் வயதில் ஓபாமா தனது காதலிக்கு உருகி உருகி வர்ணித்து எழுதிய காதல் கடிதம்
Published on

நியூயார்க்,

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தற்போது ஒய்வில் இருந்து வருகிறார். இவரது மனைவி மிச்செலி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

ஒபாமா தனது இளம் வயதில் கல்லூரியில் படித்த போது முதன் முறையாக அலெக்ஸ்சாண்ட்ரா என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 1980-ம் ஆண்டுகளில் அவருக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளார்.

அவற்றில் 9 கடிதங்கள் மட்டும் காதல் கடிதங்கள் ஆகும். அதில் அலெக்ஸ் சாண்ட்ராவை உருகி உருகி வர்ணித்து இருக்கிறார். அதன் மூலம் அவரின் தீவிர காதலை புரிந்து கொள்ள முடியும்.

இக்கடிதங்கள் 30-க்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது. இவை அனைத்தும் அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை ஒபாமா தனது குடும்பத்துடன் கலந்து பேசி வழங்கி இருக்கிறார்.

மேலும், இக்கடிதங்களில் தான் பட்ட பொருளாதார கஷ்டங்கள், கறுப்பினராக பிறந்ததால் பட்ட துயரங்கள், அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகள், என அனைத்தையும் எழுதியுள்ளார். ஒபாமா கடிதங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் குறித்த ஆய்வுக் கட்டுரை எழுத நிறைய பேர் ஆர்வமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com