ரஷிய கப்பல் மூழ்கியபோதே "3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டது" - ரஷிய தொலைக்காட்சி

ரஷிய போர்க்கப்பல் மூழ்கியபோதே 3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டது" ரஷ்ய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது.
Image courtesy: REUTERS
Image courtesy: REUTERS
Published on

மாஸ்கோ

கருங்கடலில் ரஷியாவின் முக்கிய போர்க்கப்பலான மொஸ்க்வாவில் (Moskva) வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாகவும், அதைத்தொடர்ந்து கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஆனால் உக்ரைன் தனது நெப்டியூன் ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான மொஸ்க்வா -யை அழித்ததாக கூறி வருகிறது.

இந்நிலையில், ரஷியாவின் ஊடகமான ரஷ்யா 1 தொலைக்காட்சி இப்போது நடப்பது உக்ரைனுக்கு எதிரான போர் இல்லை, நேட்டோ நாடுகளுக்கு எதிரான போர் . அப்படியெனில், இது நிச்சயம் மூன்றாம் உலகப்போர் தான் என கூறியுள்ளது.

ரஷ்யா 1 தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபேவ் கூறுகையில் போர் தீவிரமடைந்திருப்பத்தை பாதுகாப்பாக மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கலாம், அது மட்டும் உறுதி" என்று கூறினார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com