பிலிப்பைன்சில் உல்லாச விடுதி மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது - 9 பேர் உடல் கருகி பலி

பிலிப்பைன்சில் உல்லாச விடுதி ஒன்றின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியாகினர்.
பிலிப்பைன்சில் உல்லாச விடுதி மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது - 9 பேர் உடல் கருகி பலி
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் சம்பொவாங்கோ டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள திபோலாக் நகரில் இருந்து நேற்று முன்தினம் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 நர்சுகள் மற்றும் 2 விமானிகள் உள்பட 9 பேர் இருந்தனர்.

இந்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது விமானம் அங்குள்ள உல்லாச விடுதி மீது விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். கரிக்கட்டைகளான நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com