

85 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஐரோப்பிய நாடான மால்டா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மூட்டு வலியால் அவதிப்படுகிற நிலையில், அவர் சக்கர நாற்காலி லிப்ட்டைப் பயன்படுத்தி விமானத்தில் ஏறிச்சென்றார். அவர் சக்கர நாற்காலி லிப்ட் பயன்படுத்தியது பற்றி, வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறும்போது, போப் ஆண்டவரை தேவையற்ற சிரமத்துக்கு ஆளாக்குவதைத் தவிர்க்கத்தான் சக்கர நாற்காலி லிப்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது என குறிப்பிட்டார்.
போப் ஆண்டவரின் மால்டா சுற்றுப்பயணம் பற்றி வாடிகன் வெளியுறவு மந்திரி கார்டினல் பீட்ரோ பரோலின் கூறும்போது, போப் ஆண்டவர் பயண செயல் திட்டத்தில் அகதிகள் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும். உக்ரைன் நாட்டின் அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்பது உண்மையிலேயே போற்றுவதற்குரியது என குறிப்பிட்டார்.