கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல்

கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.
கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல்
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 10-ந் தேதி இரவு ராகுல் காந்தி துபாய் வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

நேற்று ராகுல்காந்தி தனது 2-வது நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். சுமார் 50 நிமிடம் அவர்களுடன் உரையாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com