

ரியாத்
எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடாநாடுகளில் லட்சக்கணக்கான வெளிநாட்டினரின் வேலைபார்த்து வருகின்றனர் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் பலர் நகரங்களின் அழகிய வானளாவிய கட்டடங்கள் மற்றும் மால்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள முகாம்களில் வாழ்கின்றனர்.
பலதொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல், ஊதியம் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
பல வாரங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்ட வளைகுடா நாடுகளான சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
நெருக்கடியான முகாம்களில் தொழிலாளர்கள் வசிப்பதால். கொரோனா பாதிப்பு அச்சம் அதிகம் உள்ளது.
ரியாத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 70 முதல் 80 சதவீதம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தான்.
கொரோனா தொற்றை குறைக்க வளைகுடா அதிகாரிகள் தொழிலாளர்களை முகாம்களில் இருந்து தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றியுள்ளனர், அதே நேரத்தில் சில நிறுவனங்கள் சோதனை மையங்களை நிறுவி, சில சுற்றுப்புறங்களில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கூட்டத்தை கூட்டுவதற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்து இந்திய தொழிலாளி நூர்தீன் கூறும் போது "என் அறையில் ஒரு சிறிய படுக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை. நான் 20 முதல் 30 நபர்களுடன் ஒரு குளியலறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வைஃபை இல்லை. ஒரு தொலைக்காட்சி கூட இல்லை. ஆனால் எனது அறையில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது என கூறினார்.
தொழிலாளர்களை வேலையில் இருந்து திருப்பி அனுப்புவதில் வளைகுடா நாடுகளிடையே ஐக்கிய அரபு அமீரகம் முன்னணியில் உள்ளது. தொழிலாளர்களில் பலர் வேலைநீக்கம் செய்யப்படடு உள்ளனர் அல்லது ஊரடங்கால் வணிக நிறுத்தங்கள் மற்றும் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை.
ஏப்ரல் 20 ஆம் தேதி நிலவரப்படி, விமான நிலையங்களிலிருந்து 127 விமானங்களில் சுமார் 22,900 வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும் 32 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதனால் இந்தியா ஒத்துழைக்க மறுத்துவிட்டது, திரும்பி வரும் லட்சகணக்கான மக்களை திருப்பி அனுப்புவதும் தனிமைப்படுத்துவதும் பாதுகாப்பு அளிப்பதும் இயலாத காரியம் என இந்திய அதிகாரிகள் கூறினர்.
அதேபோல் தனது தொழிலாளர்களை திரும்பபெற வங்காள தேசமும் தயக்கம் காட்டுகிறது.
திருப்பி அனுப்பப்படுவதை பாகிஸ்தான் அனுமதித்துள்ளது, ஆனால் அதன் விமான நிலையங்களில் சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இல்லாததால் இது
துபாயில் பாகிஸ்தான் தூதர்கள் பாகிஸ்தானியர்களை தூதரகத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர், நாடு திரும்புவதற்கு சிறப்பு விமானங்களில் இடம் கோர அங்கு குவிந்து விட்டனர்.
"வளைகுடாவில் உள்ள எங்கள் சகோதரர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். வளைகுடாவில் ஊரடங்கால் பாகிஸ்தானியர்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர் என்று வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி கடந்த வாரம் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு "நன்றிக் கடன்பட்டுள்ளோம் சுகாதார வசதி உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்குவதாகவும், காலாவதியான விசாக்கள் உள்ளவர்களுக்கு குடியேற்ற விதிகளை தளர்த்துவதாகவும் கூறி உள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ரோத்னா பேகம் கூறும் போது
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வளைகுடா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தொழிலாளர்களுக்கு அதிக சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன, ஊர்டங்கால் தொழிலாளர்கள் உணவு மற்றும் தண்ணீருக்கு தவிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நோயால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழும் மற்றும் பணிபுரியும் பிரச்சினையை இந்த தொற்றுநோய் எடுத்துக்காட்டுகிறது.
"இன்னும் வேலை செய்யும் தொழிலாளர்கள் சமூக தொலைவில் கடைபிடிக்க முடியாத பேருந்துகளில் ஏற்றப்படுகிறார்கள், மேலும் சமூக தொலைவு நடைமுறையில் இல்லாத தளங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் போதுமான அளவில் வழங்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.