பொருளாதார நெருக்கடியால் போராட்டம் - இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை

அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு இலங்கை தலைவர்களை ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் போராட்டம் - இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை
Published on

நியூயார்க்,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கலவரத்திற்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம். அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com