2021-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக எலான் மஸ்க் தேர்வு

2021-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க்கை, டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், ஆண்டுதோறும் சிறந்த நபரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மின்சார கார் விற்பனையில், டெஸ்லா நிறுவனம் இந்தாண்டு போர்டு உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது, எலான் மஸ்க் இந்த விருது பெற காரணமாக கருதப்படுகிறது. அதோடு அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளை 2021-ம் ஆண்டின் கதாநாயகர்களாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், சிறந்த விளையாட்டு வீரர் எனவும் டைம்ஸ் தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரை டைம்ஸ், சிறந்த நபர்களாக தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com