உக்ரைனை ஆளப்போவது தொழில் அதிபரா? நகைச்சுவை நடிகரா? - 2ம் கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய நாடான உக்ரைனில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான 2-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
உக்ரைனை ஆளப்போவது தொழில் அதிபரா? நகைச்சுவை நடிகரா? - 2ம் கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
Published on

கீவ்,

உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மதியம் 12 மணி அளவில் முடிவுக்கு வந்தது.

அதிபருக்கான தேர்தலில் 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் தற்போதைய அதிபரும், பிரபல தொழிலதிபருமான பெட்ரோ பொரஷென்கோவிற்கும் (வயது 53), அரசியலுக்குள் புதிதாக நுழைந்துள்ள நகைச்சுவை நடிகர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் (41) இடையில் தான் கடும் போட்டி நிலவுகின்றது.

இவர்கள் இருவரில் நாட்டை ஆளப்போவது யார் என்பது, 2-ம் கட்ட தேர்தலின் முடிவுகள் வெளியான பிறகு தெரியவரும். கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பில் பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com