இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?


இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?
x

இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

வாஷிங்டன்,

உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரசி உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விவசாய உற்பத்தி பொருட்கள் அமெரிக்க சந்தையில் குறைவான விலையில் கிடைப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய உரங்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story