முறைகேடு பற்றி அட்டார்னி ஜெனரல் விசாரணை: டிரம்ப் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பு

முறைகேடு பற்றி அட்டார்னி ஜெனரல் நடத்தும் விசாரணைக்கு டிரம்ப் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடன்கள் மற்றும் வரிச்சலுகைகளைப் பெறுவதற்காக தனது சொத்துக்களின் மதிப்பு குறித்து அதிகாரிகளை தவறாக வழி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மேன்ஹட்டனில் உள்ள நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு டிரம்ப் நேரில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணையின்போது, அட்டார்னி ஜெனரல் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் "ஒரே பதில்" என்று டிரம்ப் கூறிக்கொண்டு, ஒத்துழைப்பு அளிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விசாரணையை சூனிய வேட்டை என விமர்சித்த டிரம்ப், நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் மற்றும் தன்னிடம் நடந்த விரிவான விசாரணையை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், " பல வருட உழைப்பும், கோடிக்கணக்கான டாலர்களும் கொதித்துக்கொண்டிருக்கிற இந்த நீண்ட தொடர்கதைக்காக செலவழிக்கப்பட்டும் எந்தப் பலனும் இல்லை. அமெரிக்க அரசியல் சாசனத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளின் கீழ் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் மறுத்து விட்டேன்" என தெரிவித்துள்ளார்.

அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "டிரம்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் 5-வது திருத்த உரிமையை தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக பயன்படுத்தினார். அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ், எங்கு வழிநடத்தினாலும் உண்மைகளையும் சட்டத்தையும் பின்பற்றுவார். எங்கள் விசாரணை தொடர்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com