உலகைச்சுற்றி...

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹசாரா சமூகத்தினர் 2 பேர் பலியாகினர்.
உலகைச்சுற்றி...
Published on

* ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம், நேற்று திடீர் மின்தடை ஏற்பட்டதால் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் மின் வினியோகம் சீரானதால் அந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. ஆனாலும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல்வேறு விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகின.

* ராணுவ ஆட்சி நடக்கிற தாய்லாந்து நாட்டில் வனத்துறை இடத்தில் அரசு சொகுசு வீட்டு வசதி திட்டம் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சியாங் மாய் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

* மாலி நாட்டில் நடந்த இரு வேறு தாக்குதல்களில் டூவாரெக் சமூகத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹசாரா சமூகத்தினர் 2 பேர் பலியாகினர்.

* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், ஜப்பானுடன் எந்த நேரமும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தென் கொரிய அதிபர் மாளிகை கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com