சிரியாவில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்

சிரியாவில் உள்ள பல தீவிரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

டமாஸ்கஸ்,

ஈராக் மற்றும் சிரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்க படைகளின் உதவியுடன் அந்த இரு நாடுகளும் ஒடுக்கின. இருப்பினும் அவர்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

எனவே ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா தனது துருப்புகளை அங்கு தொடர்ந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

கடந்த மாதம், ஈராக் படைகளும் அமெரிக்க துருப்புகளும் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த மூத்த ஐ.எஸ் தளபதியையும், மேலும் பல முக்கிய போராளிகளையும் கொன்றதாக ஈராக் இராணுவம் தெரிவித்திருந்தது.

அதன் உச்சக்கட்டத்தில், இக்குழு ஐக்கிய இராச்சியத்தின் பாதிப் பகுதியை ஆட்சி செய்தது, அங்கு இஸ்லாம் பற்றிய அதன் தீவிர விளக்கத்தை அமல்படுத்தியது, இதில் மத சிறுபான்மை குழுக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் விசுவாச துரோகிகளாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கு கடுமையான தண்டனைகள் ஆகியவை அடங்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com