அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடந்து, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்
Published on

வாஷிங்டன்,

வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் திணறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து கொரோனா வைரஸ் பற்றிய தரவை JHU எனப்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உலகில் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்றுநோய்களின் எழுச்சி அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 4 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதிலும் நான்கில் ஒரு பங்கு ( 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர்), அமெரிக்காவினுடையது என்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பால்டிமோர் சார்பு பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, நேற்று மாலை 5:30 மணி வரை அமெரிக்காவில் 25,00,419 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,585 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொடர் பொது முடக்கத்தால் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பொருளாதார இழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com