பாகிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா

பாகிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, இதனால் அங்கு விலைவாசி உயர்வு என அந்நாட்டையே பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. இது தவிர பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரின் கைதுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து முன்தினம் இம்ரான்கானுக்கு 2 வாரங்கள் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விடுதலை செய்தது.

இதனிடையே பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு ரூ.300 ஆக சரிந்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறைப் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் களமிறங்கியதால், பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு புதிய வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததாகக் கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு 3.3% சரிந்து ஒரு டாலருக்கு 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com