

புது டெல்லி
வாட்ஸ்அப் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனை வசதிகளை தொடங்கியது. தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறும் வரையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு சோதனை முயற்சியில் ( பீட்டா) இருந்தது.
கடந்த ஆண்டில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் பேமெண்ட் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்தியாவில் அதனால் குறிப்பிட்ட கவனத்தைப் பெறமுடியவில்லை.
இதனால் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ்-ன் போட்டி ஆப்புகளாக கருதப்படும் கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்று வாட்ஸ்ஆப் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பேமெண்டிற்கும் கேஷ்பேக் ஆபர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.