அவரா இவர்...? வீடில்லாத நபருக்கு கிடைத்த அற்புத வாழ்க்கை

கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதல் கதையை பற்றி டிக்டாக்கில் வெளியிட்ட விவரம் வைரலாகி வருகிறது.
அவரா இவர்...? வீடில்லாத நபருக்கு கிடைத்த அற்புத வாழ்க்கை
Published on

ஒட்டாவா,

ஒரு நாள் ஷாப்பிங் செய்ய சூப்பர் மார்கெட்டுக்கு சென்றுள்ளார் ஜாஸ்மின் கிரோகன். மெக்காலே முர்ச்சீ என்ற வாலிபர் வசிக்க வீடு கூட இல்லாமல் தனியாளாக நின்றுள்ளார். அவர் மீது இரக்கப்பட்டு சிறிது பணம் கொடுத்துள்ளார் ஜாஸ்மின்.

ஆனால் ஜாஸ்மினின் உதவியை வேண்டாம் என மெக்காலே மறுத்து விட்டார். இதன்பின்பு, கடைக்கு உள்ளே சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை ஜாஸ்மின் வாங்க தொடங்கி விட்டார். எனினும், அந்நபரை பற்றிய நினைவிலேயே இருந்துள்ளார்.

பொருட்களை வாங்கி கொண்டு வெளியே வந்த ஜாஸ்மினிடம், அவற்றை நான் தூக்கி வருகிறேன் என மெக்காலே கூறியுள்ளார். இருவரும் வழியில் பேசி கொண்டனர். சாப்பிட வரும்படி மெக்காலேவை ஜாஸ்மின் அழைத்துள்ளார். அவரும் சம்மதித்து உள்ளார். இரவு விருந்து முடிந்ததும், மெக்காலேவிடம் செல்போன் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனால், இருவரும் தொடர்ந்து பேசி கொள்ள முடியும் என்ற அர்த்தத்தில்... நாங்கள் உடனடியாக காதலில் விழுந்தோம். எனக்கான நபர் அவர் என நான் உணர்ந்தேன் என்கிறார்.

மெக்காலேவை முற்றிலும் வேறுபட்ட நபராக்கினார் ஜாஸ்மின். அவரை முக சவரம் செய்ய செய்து, பல் மருத்துவரிடம் அழைத்து சென்று பற்களை சரி செய்து, நல்ல வேலையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இருவரும் சந்தித்து 2 ஆண்டுகள் கடந்து விட்டன. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். ஒவ்வொரு விசயமும் ஒரு காரணத்திற்காக நடக்கிறது என நாங்கள் நம்புகிறோம் என கூறும் ஜாஸ்மின், எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இப்போதும் ஒன்றாகவே, அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

அவர் சிறந்த தந்தையாகவும், ஆச்சரியமளிக்கும் தோழராகவும் இருக்கிறார். அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். நானும் ஏற்று கொண்டேன். விரைவில் மிசஸ் மெக்காலேவாக ஆவேன் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com