

வாஷிங்டன்,
சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளும் தப்பவில்லை. அந்நாடுகளில் தினசரி லட்சம் எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகளும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 41,05,56,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33,06,42,341 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 58 லட்சத்து 27 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 7,40,86,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 87,603 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 7,92,93,924, உயிரிழப்பு - 9,42,944, குணமடைந்தோர் - 4,97,59,394
இந்தியா - பாதிப்பு - 4,26,14,910, உயிரிழப்பு - 5,08,269, குணமடைந்தோர் - 4,15,36,361
பிரேசில் - பாதிப்பு - 2,74,25,743, உயிரிழப்பு - 6,38,124, குணமடைந்தோர் - 2,35,68,213
பிரான்ஸ் - பாதிப்பு - 2,16,22,265, உயிரிழப்பு - 1,34,697, குணமடைந்தோர் - 1,65,57,896
இங்கிலாந்து- பாதிப்பு - 1,82,66,015, உயிரிழப்பு - 1,59,518, குணமடைந்தோர் - 1,59,31,109
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
ரஷ்யா - 1,39,35,560
துருக்கி - 1,28,34,534
ஜெர்மனி - 1,22,78,862
இத்தாலி - 1,20,53,330
ஸ்பெயின் - 1,06,04,200
அர்ஜெண்டீனா - 87,28,262
ஈரான் - 67,80,453
கொலம்பியா - 60,14,563
நெதர்லாந்து - 56,74,315
போலந்து - 53,80,219