உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 42 லட்சத்தை கடந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்தது
Published on

வாஷிங்டன்,

சீனாவில் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. வைரஸ் தொற்றால் உலக அளவில் அதிக உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 42 லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,10,318 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,84,448 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 15,05,945 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,68,036 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 80,789 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2,56,336 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவை தொடர்ந்து ஸ்பெயினில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,68,143 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 26,744 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,77,846 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்த ரஷ்யாவில் தற்போது பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,21,344 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,009 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 39,801 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கடுத்தபடியாக இங்கிலாந்து, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com