கோவாவில் வீடு வாங்கிய ராஷ்மிகா

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார்.
கோவாவில் வீடு வாங்கிய ராஷ்மிகா
Published on

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காமரேட் படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ராஷ்மிகாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள வஜ்ரபேட் ஆகும். அங்குள்ள அவரது வீட்டில் கடந்த வருடம் வருமானவரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா பெயரில் இருந்த வங்கி கணக்கு மற்றும் சொத்து விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராஷ்மிகா கோவாவில் பல கோடி செலவில் புதிய வீடு வாங்கி இருக்கிறார்.

தோட்டத்துடன் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. கோவா வீட்டில் உள்ள நீச்சல் குளம் புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். புதிய வீடு வாங்கிய ராஷ்மிகாவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தி, தெலுங்கு நடிகர் நடிகைகள் பலர் கோவாவில் சொந்தமாக வீடு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com