மும்பை,
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டி.வி. தொடர் தயாரிப்பாளர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நடிகை பாலியல் புகார்
இந்தி தொலைக்காட்சி தொடரான 'தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மா'வில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிபர் மிஸ்திரி பான்சிவல். இவர் சமீபத்தில் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் நடிகை ஜெனிபர் டி.வி. தொடரின் தயாரிப்பாளர் அசித்குமார் மோடி மற்றும் 2 பேர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக போலீஸ், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். நடிகையின் குற்றச்சாட்டை டி.வி. தொடரின் தயாரிப்பாளர் மறுத்தார். தொடரில் இருந்து நீக்கியதால் நடிகை பொய் குற்றச்சாட்டை கூறுவதாக கூறினார்.
வழக்குப்பதிவு
நடிகையின் புகார் தொடர்பாக பவாய் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பவாய் போலீசார் நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டி.வி. தொடர் தயாரிப்பாளர் அசித்குமார் மோடி மற்றும் தொடரின் செயல் தலைவர் சோகைல் ரமனி, நிர்வாக தயாரிப்பாளர் ஜதின் பஜாஜ் மீது பாலியல் தொல்லை, மானபங்கம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.