இருசக்கர வாகனம் பரிசளித்த சிவகுமார்

1980-90ஆம் ஆண்டுகளில் கொடிக்கட்டி பறந்த நடிகர் சிவகுமார், இருச்சக்கர வாகனம் பரிசளித்த நிகழ்வு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இருசக்கர வாகனம் பரிசளித்த சிவகுமார்
Published on

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர் செந்தலை ந.கவுதமன் மற்றும் 1980களில் சிவகுமாரை கதாநாயகனாக வைத்து 2 படங்கள் எடுத்த தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற சூலூர் கலைப்பித்தனுக்கும் நடிகர் சிவகுமார் இருச்சக்கர வாகனம் பரிசளித்தார்.

புலவர் செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர். அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை வாங்கி நடிகர் சிவகுமார் நேற்று பரிசளித்துள்ளார். இவரின் இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com