'கண்டிப்பா ஓட்டு போடுங்க' - தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

நமது அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்காக நிச்சயமாக ஓட்டு போட வேண்டும் என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
'கண்டிப்பா ஓட்டு போடுங்க' - தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி
Published on

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், "நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தால் நமக்கென்ன, இல்லை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம். ஓட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இது போன்ற மனநிலையை தூக்கி ஓரமா வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லையென்றாலும் நமது குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நமது அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமாக ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது.

நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள்". என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com