தலாய் லாமாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கங்கனா ரனாவத்

இமாச்சல பிரதேசத்தில் மண்டி மக்களவைத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
தலாய் லாமாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கங்கனா ரனாவத்
Published on

சிம்லா,

பாலிவுட் நடிகையும் பா.ஜ.க. வேட்பாளருமான கங்கனா ரனாவத், புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பா. ஜனதா கட்சியின் வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களமிறங்கியுள்ளார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கங்கனா ரனாவத் , தர்மசலாவில் உள்ள தலாய் லாமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தலாய் லாமாவை சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கங்கனா ரனாவத்,

தலாய் லாமாவை சந்தித்தது, என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இமாச்சலில் மகிழ்ச்சியாக வசிப்பதாகவும் பாரதத்தை நேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார் என்று பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது இமாச்சல பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜெய்ராம் தாக்கூரும் உடன் சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com