கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு பொருட்கள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நாடாளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

இதில் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் இந்த தொற்றுநோய் காலத்தில் யாரும் பசியாக இருக்கவில்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது.

பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ரூ.2 லட்சம் கோடி செலவில் ஜனவரி 1 முதல் அரசு செயல்படுத்துகிறது.

பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கான விளை பொருட்களுக்கு விலை ஆதரவு மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளை நோக்கி திரும்பும் நடவடிக்கைகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி பல ஆண்டுகளாக உற்சாகமாக உள்ளது.

வேளாண் துறையில் தனியார் முதலீடு நிதியாண்டில் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com