கால்பந்து போட்டியில் தோல்வி - கண்ணீர் வடித்த ரொனால்டோ!

செர்பியாவுக்கு எதிரான கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணி தோல்வி அடைந்தது.
கால்பந்து போட்டியில் தோல்வி - கண்ணீர் வடித்த ரொனால்டோ!
Published on

லிஸ்பன்,

செர்பியாவுக்கு எதிரான கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணி தோல்வி அடைந்ததை அடுத்து மைதானத்தில் அமர்ந்தபடியே ரொனால்டோ கண்ணீர் வடித்தார்.

2022ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில், செர்பியா-போர்ச்சுகல் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று லிஸ்பனில் நடைபெற்றது.

இந்த போட்டியில் செர்பிய அணி 1-2 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது.

இந்த தோல்வியின் மூலம், போர்ச்சுகல் அணி, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

போர்ச்சுகல் அணி பிளே-ஆப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவதன் மூலம், உலகக்கோப்பைக்கு தகுதி பெறலாம் எனும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com