டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் கர்ப்பம்

டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் கர்ப்பம் அடைந்துள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் கர்ப்பம்
Published on

சூரிச்,

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் 2017-ம் ஆண்டு டென்னிசுக்கு முழுக்கு போட்டார். குறைந்த வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்ததோடு, டென்னிசில் அழகு புயலாக ரசிகர்களை கிறங்கடித்தார். 209 வாரங்கள் தரவரிசையில் முதலிடத்திலும் இருந்துள்ளார். ஒற்றையர், இரட்டையரை சேர்த்து மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் அவர் சுவிட்சர்லாந்து அணியின் மருத்துவர் ஹெரால்டு லீமானை திருமணம் செய்து கொண்டார். நேற்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடிய ஹிங்கிஸ், தன்னை வாழ்த்திய உள்ளங்களுக்கு டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்ததுடன், தான் கர்ப்பமாக இருப்பதையும் பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவராக பிறந்த நாளை கொண்டாடப்போவது இதுவே கடைசி முறையாகும். எங்களது இல்வாழ்க்கையில் புதிய வரவு வரப்போகிறது என்பதை பரவசத்தோடு அறிவிக்கிறேன் என்று ஹிங்கிஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com